கிரிஸ்டல் குருப்பூம் Xrbiaடெவலப்பர்ஸும் மும்பை சிட்டி சென்டரின் மலிவு விலை வீட்டுத் திட்டமான `செம்பூர் சென்ட்ரல்' ஐ அறிவித்தனர்

மும்பை, April 13, 2017 /PRNewswire/ --

மும்பை டெவலரப்பரான `கிரிஸ்டல் குரூப்'பும் மலிவு விலையில் வீடுகளை கட்டித்தரும் `Xrbiaடெவலப்பர்ஸூம்' இணைந்து அவர்களது கேம்-சேஞ்சிங் சிட்டி - செண்டர் திட்டமான 2.5 மில்லியன் சதுர அடியில் 6000 வீடுகளைக் கொண்ட திட்டத்தின் முதல் கட்டமாக 700,000 சதுர அடியில் 2000 வீடுகளைக் கட்டும் திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். 

     (Photo: http://mma.prnewswire.com/media/489409/Mukesh_Doshi_Rahul_Nahar_Crystal_Group_Xrbia_Developers_Ltd.jpg )
     (Logo: http://mma.prnewswire.com/media/470753/XRBIA_Logo.jpg )

இந்தத் திட்டம் மும்பை நகரத்தின் ரியல் எஸ்டேட் சந்தையில் மலிவு விலை வீடுகள் கிடைப்பதற்கு வழிவகுக்கும்.1 BHK அபார்ட்மெண்ட்டுக்கான விலை ரூ 40 லட்சத்தில் தொடங்கி 2BHK ரூ 80 லட்சம் வரை இருக்கும். 1BHK வின் கார்பெட் பரப்பு 180 முதல் 230 சதுர அடி கொண்டதாகவும், 2 BHK வின் கார்பெட் பரப்பு 305 சதுர அடி கொண்டதாகவும் இருக்கும். இந்தத் திட்டம் சுமார் 40 மாதங்கள் வரை நீடிக்கும்.

Aryamaan Developers Pvt. Ltd., ஆல் உருவாக்கப்படும் `செம்பூர் செண்ட்ரல்' மும்பையின் பசுமையான புறநகர் பகுதியொன்றில் அமைந்திருக்கும். BKC -யிலிருந்து 10 நிமிடமும், நவி மும்பையிலிருந்து 15 நிமிடமும், CST மற்றும் சர்வதேச விமானநிலையத்திலிருந்து 20 நிமிடமும் ஆகக்கூடிய தூரத்தில் அமைந்திருக்கும் இந்த கட்டிடம் சிட்டி-செண்டரை செளகரியமாக அணுக விருப்பப்படுபவர்களுக்கும் ஏற்றதாகும்.

வரக்கூடிய வருடங்களில் திட்டம் அமையக்கூடிய இடம் மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கவேண்டும், சமீபத்தில் மஹாராஷ்ட்ரா அரசு அறிவித்த 7 மெட்ரோ நிலையங்களில் மெட்ரோ 4 லிருந்து ஒரு நிமிட தூரத்தில் இந்தத் திட்டம் அமையும். இந்த திட்டத்திலிருந்து 15 நிமிட தூரத்தில் Phoenix Market City Mall, R City மாலும் அமைந்திருக்கின்றன.

செம்பூர் செண்ட்ரலில் நவீன வசதிகளுடன் கூடிய 50 வசதிகளையும், நீச்சல் குளத்தையும்  பறைசாற்றுவதாக இருக்கும். பலநிலைகள் கொண்ட க்ளப் ஹவுஸ், ஸ்குவாஷ் கோர்ட், 600 மீட்டர் வாக்கிங் ட்ராக், பிரத்யேகமான ரெஸ்டாரெண்ட், காஃபி டெக், ஷாப்பிங், ஸ்பா மற்றும் ஆம்ஃபிதியேட்டர் போன்ற வசதிகள் இதன் சிறப்பம்சங்கள் ஆகும். இந்தத் திட்டத்தை வடிவாக்கன் செய்ததும், திட்டமிட்டதும் பிரபல கட்டிடக்கலை நிபுணர் ஹஃபீஸ் காண்ட்ராக்டர்.

"மும்பையில் வீடுகளுக்கான மிகவும் விரும்பத்தக்க இடமாக இந்த இடம் இருப்பதோடு, வருடத்திற்கு 15 லிருந்து 18 சதவிகிதம் வரை மதிப்பு அதிகரிக்கக்கூடியதாகவும் இருப்பதால் முதலீடு செய்வதற்கு ஒரு முக்கியமான இடமாக இது அமைவது ஒரு சிறப்பம்சம்" என்று சர்வதேச கன்சல்டண்ட் அறிக்கைக் கூறுகிறது.  

மில்லெனியல் மற்றும் இளைய தொழில்வல்லுநர்களை இலக்காகக் கொண்ட இந்தத் திட்டம் மலிவான விலையில் செளகரியத்தை மதிப்பவர்களுக்கு அடக்கமான வடிவத்தோடு கூடிய வீட்டை உருவாக்கும். சமூகத்தின் தேவையான வெளி பயன்பாட்டை சிறப்பாக திருப்தி செய்யக்கூடிய செர்பியாவுடன் உயர்தரமான திட்டங்களை நிர்ணயத்த காலத்திற்குள் வழங்குவதில் புகழ்பெற்ற கிரிஸ்டல் குரூப்பும் இணைந்து  சிட்டி-சென்டர்களில் அடக்கமான வீடுகளை வழங்கும் போக்கில் தாங்கள் முன்னோடிகளாக இருப்போம் என நம்புகிறார்கள்.

"சில சிட்டி சென்டர் திட்டங்களில் மும்பையின் பெரிய உள்கட்டமைப்புப் பகுதிகளை இணைக்கும் சரியான இடமாக இந்த செம்பூர் சென்ட்ரல் இருக்கும். இந்தப் பிரதானமான சொத்தை வீடு தேடுபவர்களுக்குக் கிடைக்கும்படி செய்வோம் என நாங்கள் நம்புகிறோம். குறித்த நேரத்தில் வழங்குவதிலும், தரத்திலும் கிரிஸ்டல் குரூப் புகழ்பெற்றது. நாங்கள் செய்யக்கூடிய அனைத்திலும் இது வெளிப்படும்" என்று Mr Mukesh Doshi, Crystal Groupன் தலைவர் தெரிவித்தார்.

"அடக்கமான வீடுகளை மும்பைக்குக் கொண்டுவருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இது மும்பை ரியல் எஸ்டேட் துறையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம்" என்று Mr Rahul Nahar, Xrbia Developersன் தலைவர் கூறினார்.

கிரிஸ்டல் குரூப் பற்றி: 

80களின் முற்பகுதியிலிருந்து கிரிஸ்டல் குரூப் இந்தத் தொழிலில் இருந்து வருகிறது. ரியல் எஸ்டேட் துறையில் இந்நிறுவனம் நல்ல வளர்ச்சியடைந்து தங்களுக்கென்று ஒரு பெயரைப் பெற்றிருக்கிறது. நகரத்திலிருக்கும் முக்கியமான வானளாவிய கட்டிடங்களை கட்டி புகழ்பெற்றதோடு தரமான டெலிவரிக்கென்றும் பெயர் பெற்றவர்கள். கட்டிடகலை, ரியல் எஸ்டேட் துறைகளில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் சுற்றுப்புறச்சூழலுக்கும் பொறுப்பானவர்கள் என்கிற பெருமை இந்த குரூப் கொண்டிருக்கிறது. நளினமான மேம்பாட்டில் நிபுணத்துவம் பெற்றிருப்பதோடு மேம்படுத்துவதிலும், ரியல் எஸ்டேட் துறையிலும் அளவுகடந்த ஞானத்தை கிரிஸ்டல் குரூப் கொண்டிருக்கிறது.

Xrbia டெவலப்பர்ஸ் லிமிட்டெட் பற்றி: 

மக்களுக்குத் தரமான வாழ்க்கையை கொடுக்கக்கூடிய ஸ்மார்ட்டர், பயன்மிக்க, நீடித்து இருக்கக்கூடிய நகரங்களுக்கான இந்தியாவின் தேவையை Xrbia புரிந்து கொண்டிருக்கிறது. உயர்ந்த வாழ்க்கை அனுபவம் வழங்குவதை முன்னுரிமையாகக் கொண்டு, Xrbia அங்கு வசிப்பவர்களுக்கு சிறந்த நகர உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கும். 2030 ஆம் ஆண்டுக்குள் 100 தயார் நிலையிலான எதிர்கால நகரங்களை உருவாக்கும் நோக்கத்துடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் Xrbia தனது புதிய பயணத்தைத் தரம் மற்றும் நவீன நகர மேம்பாட்டுக்கான பெஞ்ச்மார்க்கை நாட்டில் ஏற்படுத்தும் வகையில் ஆரம்பிக்கிறது. கட்டிடம் கட்டுவது, ஆப்பரேஷன்களிலிருந்து வாடிக்கையாளர்கள் கணக்கிடுவது, நிர்வாகம் செய்வது, அவர்கள் உபயோகிக்கும் சேவைகளுக்கும் பணம் செலுத்துவது என அனைத்திற்கும் இந்த பிராண்டை தொழில்நுட்பம் முன்னெடுத்துச் செல்கிறது. உலக போக்கிற்கு ஏற்ப Xrbia அடக்கமான மலிவு விலை வீடுகளை வடிவமைப்பதோடு தரமான வசதிகளான இலவச கார் பார்க்கிங், சமூக மையம், நீச்சல் குளம், கமர்ஷியல் காம்ப்ளக்ஸ் போன்றவற்றை வழங்குகிறது. இந்த வருடம் மட்டும் இந்தியாவில் 18 இடங்களில் நகரங்களை உருவாக்கியிருப்பதோடு, மஹாராஷ்ட்ராவில் 40,000 வீடுகளை லாஞ்ச் செய்திருக்கிறார்கள். Xrbiaவின் நோக்கம் வீடுகளைக் கட்டுவது மட்டுமல்லாமல் சுற்றுப்புறச்சூழலுக்கு இணக்கமான, தொழில்நுட்பமுறையில் மேம்பட்ட, கல்விக்கும், ஆரோக்கியத்துக்குமான அர்ப்பணிப்பும், சமூக உணர்வை வளர்ப்பதுமான நகரங்களை உருவாக்குவதுமாகும்.


ஊடகத் தொடர்புக்கு:
Namrata Aswani
namrata@itwconsulting.in
+91-9920710261
Business Head PR, ITW Consulting

SOURCE Crystal Group and Xrbia Developers LtdJournalists and Bloggers

Visit PR Newswire for Journalists for releases, photos and customised feeds just for media.

View and download archived video content distributed by MultiVu on The Digital Center.

 

Get content for your website

Enhance your website's or blog's content with PR Newswire's customised real-time news feeds.
Start today.

 

 
 

Contact PR Newswire

Send us an email at indiasales@prnewswire.co.in or call us at +91 22 6169 6000

 

 
 

Become a PR Newswire client

Request more information about PR Newswire products & services or call us at +91 22 6169 6000

 

 
  1. Products & Services
  2. Knowledge Centre
  3. Browse News Releases
  4. Contact PR Newswire