ஒரு வாரம் முழுவதும் புத்தம்புதிய நிகழ்ச்சிகளுடன் CPhI and P-MEC India உடன் சேர்த்து 'India Pharma Week' மீண்டும் நடைபெற உள்ளது

மும்பை, November 22, 2017 /PRNewswire/ --

UBM India வழங்கும் மருந்து தயாரிப்பு துறையின் தலைமை, வணிகம், அறிவாற்றல், நெட்வொர்க்கிங், அங்கீகாரம் மற்றும் புதுமை ஆகியவைத் தொடர்பான மாறுபட்ட கூட்டம் 

- தென்னிந்தியாவின் மிகப் பெரிய ஃபார்மா நிகழ்ச்சி 

- CPhI and P-MEC India இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெறுகிறது அதாவது, MMRDA கிரவுண்ட்ஸ் (BKC), மும்பை - நவம்பர் 27 முதல் 29 வரை; பாம்பே எக்சிபிஷன் சென்டர் (கோரெகான்) -  நவம்பர் 28 முதல் 30 வரை

- 1500+ காட்சியாளர்கள்; 40+ நாடுகள்

- India Pharma Week முழுவதும் மும்பையில் 10க்கும் அதிகமான சிறப்பு நிகழ்ச்சிகள்  

இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரான UBM India, பரவலாக பாராட்டப்பட்ட India Pharma Week-யின் இரண்டாவது கூட்டத்தை நடத்த உள்ளது. இதன் CPhI and P-MEC India என்னும் சிறப்புமிக்க கண்காட்சியுடன் சேர்த்து நவம்பர் 25 முதல் 30 வரை புத்தம்புதிய நிகழ்ச்சிகளுடன் ஒரு வாரம் முழுவதும் கொண்டாட உள்ளது. இதன் 11வது கூட்டத்தில், இந்த பிரபலமான கண்காட்சி மும்பையில் இரண்டு இடங்களில் நடைபெற உள்ளது - MMRDA கிரவுண்ட்ஸ், பந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ் (நவம்பர் 27 முதல் 29 வரை) மற்றும் பாம்பே கண்காட்சி மையம் (நவம்பர் 28 முதல் 30 வரை).

     (Logo: http://mma.prnewswire.com/media/608528/India_Pharma_Week_Logo.jpg )
     (Logo: http://mma.prnewswire.com/media/608529/CPhI_India_and_P_MEC_Logo.jpg )
     (Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )

CPhI and P-MEC Indiaவின் 11வது ஆண்டு கொண்டாட்டத்தில், India Pharma Week 10 நிகழ்ச்சிகளையும் செயல்பாடுகளையும் நடத்தவுள்ளது. இவை மருந்து தயாரிப்பு துறையின் தலைமை, வணிகம், அறிவாற்றல், நெட்வொர்க்கிங், அங்கீகாரம் மற்றும் புதுமை ஆகிய பிரிவுகள் தொடர்பாக மும்பையில் நடத்தப்பட உள்ளன. இந்த வாரம் தொழிற்சாலை சந்திப்பிலிருந்து துவங்கும். இதில் ஃபார்மா லீடர்ஸ் கால்ஃப், ப்ரீ-கனெக்ட் காங்கிரஸ், விமன் இன் ஃபார்மா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் - பவர் பிரேக்ஃபஸ்ட், இந்திய ஃபார்மா விருதுகள், நெட்வொர்க்கிங் ஈவினிங், CPhI & P-MEC India கண்காட்சி, தனிப்பட்ட CEO வட்டமேசை மற்றும் மேலும் பல செயல்பாடுகள் நடைபெற உள்ளன.

2006யில் துவங்கப்பட்ட CPhI & P-MEC India கண்காட்சி காலப்போக்கில் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இதில் காட்சியாளர்களும் பார்வையாளர்களும் கணிசமான அளவு வணிகம் செய்கின்றனர். இது Pharmaceuticals Export Promotion Council (Pharmexcil) போன்ற கட்டுப்பாட்டு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டு, வழிநடத்தப்படுகிறது. இரண்டு இடங்களில் நடைபெற உள்ள இந்த ஆண்டின் கூட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட காட்சியாளர்களும், 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ளனர்.

IPWவின் அறிவிப்பு பற்றி பேசிய, திரு. Yogesh Mudras, Managing Director, UBM India கூறியதாவது, "ஒரு வாரம் முழுவதும் நடைபெற உள்ள India Pharma Week-யின் இரண்டாவது கூட்டம் குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.UBM மிகச் சிறந்த முறையில் நடத்தும் CPhI & P-MEC Indiaவுடன் சேர்த்து இதனை நடத்த உள்ளது. ஃபார்மா துறையில் இந்தியாவிற்கு உள்ள வலிமையை எடுத்துக்காட்டும் இந்தக் கண்காட்சி,  உலகளவில் செயல்படும் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் பிரத்யேக கூட்டமாக நடைபெறுமளவிற்கு தொடர்ந்து வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா உலகளாவிய மருந்து உற்பத்தியாளர்களுக்கு சாத்தியமான சந்தையாகப் பார்க்கப்படுகிறது. இது இப்போது உலகளாவிய ஃபார்மஸி மையமாக மாறுவதற்கு தயாராக உள்ளது. பல்வேறு பொருளாதார இயக்கிகளும், ஃபார்மா பார்க்குகள் போன்ற அரசாங்க திட்டங்களும் துணைப் பிரிவுகளுடன் பயோசிமிலர்கள் மற்றும் பயாலஜிக்ஸ் பிரிவை வளர்ச்சியடைய செய்து, உற்பத்தி செலவுகளைக் குறைக்கின்றன. இவையே நாட்டில் இந்தத் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. இந்தியாவை  மருந்து உற்பத்தியில் உலகளவில் முதலிடம் பிடிக்க செய்வதற்காக அறிமுகம் செய்யப்பட்ட, 'Pharma Vision 2020' முதலீடுகளையும் அதிகரித்துள்ளது.

"India Pharma Week, சவால்களை சமாளித்து தீர்வுகளை அளிப்பதற்காகவும், தரமான தரநிலைகளை நிறுவுவதற்காகவும் உலகளவில் அனைவரையும் இணைக்க 'Make in India', 'Startup India, Stand Up India', and 'Skill India' போன்ற முக்கிய அரசாங்க முயற்சிகளை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. Drug Controller General of India (DCGI) சமீபத்தில் மருந்து துறை தொழிற்சாலைகளைச் சேர்ந்த பணியாளர்கள் அனைவரும் திறன் சான்றிதழைப் பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது. இதன் காரணமாக IPW போன்ற துறை வல்லுநர்களின் குறிப்பிடத்தக்க கூட்டங்களும் அறிவுப் பகிர்தலும் மேலும் அதிகரித்துள்ளது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

CPhI and P-MEC India கண்காட்சி பற்றி 

CPhI Worldwideயிலிருந்து உருவான CPhI India தென்னிந்தியாவின் முன்னணி ஃபார்மா சந்திப்பு புள்ளியாக மாறியுள்ளது. இது மருந்து கண்டுபிடிப்பு முதல் ஆக்கம்பெற்ற மருந்தளவு வரை வழங்கல் சங்கிலியின் ஒவ்வொரு அடியையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் CROக்கள், CMOக்கள் மற்றும் API, ஜெனரிக்குகள், மருந்து கலப்பி ஆகியவற்றின் உற்பத்தியாளர்கள் மற்றும் மருந்து தயாரிப்பு, நுண்ணிய இரசாயனங்கள், பயோசிமிலர்கள், ஆக்கம்பெற்ற தயாரிப்புகள், ஆய்வுக்கூட இரசாயனங்கள் மற்றும் உயிரி தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஆனால், P-MEC ஃபார்மா இயந்திரம் மற்றும் உபகரணம், பகுப்பாய்வு உபகரணம், தன்னியக்கம் மற்றும் ரோபாட்டிக்ஸ், பேக்கேஜிங் உபகரணம் மற்றும் வழங்கு பொருட்கள், தொழிற்சாலை உபகரணம், தன்னியக்கம் மற்றும் கட்டுப்பாட்டுகள், ப்ராசஸிங் உபகரணம், RFID, டேப்ளெட்டிங் / கேப்சூல் ஃபில்லர்கள், சுத்தமான அறைக்கான உபகரணம், ஃபில்லிங் உபகரணம் மற்றும் ஆய்வுக்கூட தயாரிப்புகள் போன்றவற்றின் உற்பத்தியாளர்களை உள்ளடக்கியுள்ளது.

இந்தியாவில் ஃபார்மா சூழ்நிலை 

உலகின் ஃபார்மசியாக பிரபலமாகியிருக்கும் இந்திய ஃபார்மா பொருளாதாரம், சமீப காலங்களில் அடைந்திருக்கும் அதிவேக வளர்ச்சியால் பாராட்டப்படுகிறது. இந்தத் துறை சமீப ஆண்டுகளில் சற்றே தணிந்திருந்தது, ஆனால் இப்போது மீண்டும் வலிமையாக வளர்ச்சியடைந்து வருகிறது. கூட்டு ஆண்டு வளர்ச்சி 17.6%ஆக உள்ளது; இந்திய ஃபார்மா 2020க்குள் 55 பில்லியன் மதிப்பைக் கொண்டதாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து, இந்தியாவில் வாழ்வியல் துறையும் 2022க்குள் கிட்டத்தட்ட 3.5 மில்லியன் மக்களை வேலைக்கு சேர்க்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பத்தாண்டுகளுக்குள் 100% வளர்ச்சியாகும். இந்திய ஃபார்மா துறையின் வெற்றிக்கு அதன் தைரியமான, ஆர்வம் நிரம்பிய அணுகுமுறை, புதுமை மற்றும் வலிமைமிக்க உலகளாவிய சந்தையில் தொடர்ந்து தன்னை பொருத்திக்கொள்ளும் திறன் ஆகியவையே காரணம்.

கடந்த ஐந்தாண்டுகளாக இந்தியா முன்னணி APIஆக மாறியுள்ளது. இது மேற்கத்திய சந்தைகளுக்கு ஆக்கம்பெற்ற மருந்துகளை ஏற்றுமதி செய்து, மருந்து தயாரிப்பு மதிப்பு சங்கிலியில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்திய நிறுவனங்களுக்கு US Food and Drug Administration (USFDA) கொடுத்துள்ள மருந்து தயாரிப்பு அனுமதிகள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 109 (2014-2015)யிலிருந்து 201ஐ (2015-2016) அடைந்துள்ளது. இது யுனைட்டட் ஸ்டேட்ஸிலும் மேற்கத்திய பொருளாதாரத்திலும் ஏற்றுமதிகளில் மேலும் வளர்ச்சியைத் தூண்டுகிறது. மேலும், இந்திய அரசு இப்போது வளர்ச்சியை மேலும் அதிகரிப்பதற்கு ஊக்கப்படுத்துவதற்காக இந்த வணிகத்திற்கு அதிக ஆதரவளித்துவருகிறது.

மேலும், இந்தியா தற்போது R&D முதல் ஜெனரிக்குகள் வரை ஃபார்மா வழங்கல் சங்கிலி முழுவதும் அதிவேகமாக முக்கிய பங்கேற்பாளராக உருவாகிவருகிறது.

துறை குறித்த கருத்து  

Food and Pharma Specialities  

"CPhI & P-MEC India, சமீபத்திய தொழில்நுட்பம் பற்றி இந்திய ஃபார்மா துறை தெரிந்துகொள்வதற்கான உலகளாவிய மேடையை அளிக்கிறது. முன்பெல்லாம், இந்திய மருந்துத் தயாரிப்பு துறையைச் சேர்ந்தவர்கள் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புதுமைகள் குறித்து தெரிந்துகொள்ள சர்வதேச பொருட்காட்சிகளுக்கு பயணம் செய்ய வேண்டும். ஆனால், CPhI & P-MEC India இது போன்ற தகவல்களை இந்திய ஃபார்மாவின் நுழைவாயிலுக்கே கொண்டுவருகிறது" என்று திரு. Damanjit Singh, CEO, Food & Pharma Specialities கூறினார்.

Supriya Lifescience 

Ms. Saloni Wagh, Marketing & Business Development - Asia Pacific, Supriya Lifescience, என்பவரும் CPhI மாநாட்டில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவர், "CPhI என்பது உலகின் முன்னணி ஃபார்மா நிகழ்ச்சிகளுள் ஒன்றாகும். இதில் மொத்த துறையும் சமீபத்திய போக்குகள், தகவல்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவும் தெரிந்துகொள்வதற்காகவும் ஒன்றுகூடும். CPhI Worldwide கண்காட்சிகள் எங்களின் மார்க்கெட்டிங் உத்தியில் முக்கிய பங்காற்றுகின்றன. ஏனென்றால், இது உலகம் முழுவதிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் சந்திப்பதற்கான மேடையாக இது உள்ளது. புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவும், வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களை அடையாளம் காணவும் இது மிகச் சிறந்த மேடையாகும்," என்று கூறினார்.

ACE Technologies  

" CPhI & P-MEC இந்திய மருந்து தயாரிப்பு துறைக்கு தூண் போன்றது. இந்தத் துறை ஒரே இடத்தில் அனைவரும் ஒன்றுகூடுவதற்கு வாய்ப்பினை அளிக்கிறது. இது மொத்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சியாகும். மொத்த மருந்து தயாரிப்பு துறைக்கும் முக்கியமான இந்நிகழ்ச்சி, எங்களின் ஆண்டு காலண்டரில் மிக முக்கியமான நிகழ்ச்சியாக மாறியுள்ளது. எனவே இது எங்கள் மார்க்கெட்டிங் திட்டத்தில் மிக வலிமையான பகுதியாகும். ஒருபுறம் இது ஒரே மேடையில் மொத்த துறையையும் அணுகச் செய்கிறது, மறுபுறம், இது இவர்கள் மத்தியில் முக்கியமான தொடர்பை நாங்கள் ஏற்படுத்தி கொள்ளவும் உதவுகிறது," என்று திரு. Ajay Mehra of ACE Technologies Group கூறினார்.

UBM India பற்றி:

UBM India, இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும். இது உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களையும் விற்பனையாளர்களையும் பல கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் இணைப்பதற்கான மேடைகளை வழங்குகிறது. UBM India ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதிலும் பெரிய அளவில் 25 கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகிறது. இதனால் பல துறைகளின் வணிகத்திற்கு வழிவகுக்கிறது. UBM Asia கம்பெனியின் UBM India மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM Asia-வின் உரிமையாளர் UBM plc  ஆகும். இது லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia என்பது ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும். இது மெய்ன்லேண்ட் சீனா, இந்தியா மற்றும் மலேசியாவில் உள்ள மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளராகும்.

மேலும் விவரங்களுக்கு, பார்க்கவும்: http://www.ubmindia.in.

UBM plc பற்றி:  

UBM plc என்பது உலகிலேயே மிகப் பெரிய பிரத்யேக B2B நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகும். வளர்ந்துவரும் டிஜிட்டல் உலகில், மனிதர்கள் ஒரு காரணத்திற்காகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். UBMல் எங்களின் ஆழமான அறிவும், நாங்கள் செயல்படும் இந்தத் துறையில் எங்களுக்கு உள்ள ஆர்வமும் மக்கள் வெற்றிப் பெறுவதற்கான சிறந்த அனுபவங்களை உருவாக்க எங்களுக்கு உதவுகிறது. எங்களின் நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளைக் கட்டமைத்து, வணிகம் செய்து, தங்கள் தொழிலை வளர்ச்சியடைய செய்கின்றனர். எங்களின் 3,750+ உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளனர், இவர்கள் 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளில் செயல்படுகின்றனர். இதில் ஃபேஷன் முதல் மருந்து தயாரிப்பு உட்பொருட்கள் வரை அனைத்தும் அடங்கியிருக்கும். இந்த உலகளாவிய நெட்வொர்க் திறமிக்க, ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைத்து, வியாபாரிகள் தங்கள் இலங்குகளை அடைய அற்புதமான வாய்ப்புக்களை அளிக்கும் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

மேலும் தகவலுக்கு, http://www.ubm.com; UBM கார்ப்பரேட் செய்திக்கு, ட்விட்டரில் @UBM, லிங்க்டனில் UBM Plc-யில் பின்தொடருங்கள்.

ஊடகம் குறித்த தகவலுக்கு தொடர்பு கொள்ளவும் :
UBM India
Roshni Mitra
roshni.mitra@ubm.com  

Mili Lalwani
mili.lalwani@ubm.com
+91-22-61727000

SOURCE UBM India Pvt. Ltd. 

Get content for your website

Enhance your website's or blog's content with PR Newswire's customised real-time news feeds.
Start today.

 

 
 

Contact PR Newswire

Send us an email at indiasales@prnewswire.co.in or call us at +91 22 6169 6000

 

 
 

Become a PR Newswire client

Request more information about PR Newswire products & services or call us at +91 22 6169 6000

 

 
  1. Products & Services
  2. Knowledge Centre
  3. Browse News Releases
  4. Contact PR Newswire