UBM India அனைவரும் விரும்பும் ஆபரண பிராண்டுகளின் பட்டியலை அறிமுகப்படுத்தி, அவற்றிற்கு 'India's Most Preferred' என்னும் அடையாளத்தை அளித்துள்ளது

மும்பை, December 7, 2017 /PRNewswire/ --

துறையின் வல்லவர்கள், முக்கிய பிரமுகர்களின் பங்கேற்பு, நுண்ணறிவுகள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை IMP நிகழ்ச்சியை மறக்க முடியாத மாலை வேளையாக மாற்றியது  

இந்தியாவின் முன்னணி B2B கண்காட்சி ஏற்பாட்டாளரான UBM India, மும்பையின் The Sofitel லில், இந்தியாவின் ஆபரண சில்லறை விற்பனைத் துறையில் India's Most Preferred (IMP) என்னும் பிரத்யேக பிரசாரத்தின்  கீழ், இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் ஆபரண பிராண்டுகளை கெளரவித்துள்ளது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பிரசாரத்தின் மூலம் UBM India, கண்காட்சிகள் தொழிலில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆபரண தொழில் பிரிவில் ஓராண்டு முழுவதும் கவனம் செலுத்தியுள்ளது.

     (Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
     (Logo: http://mma.prnewswire.com/media/543909/UBM_India_s_Most_Preferred_initiative_Logo.jpg )
     (Photo: http://mma.prnewswire.com/media/616193/UBM_Most_Preferred_Jewellery_Brands.jpg )

பிரமாண்டமான India's Most Preferred 'அறிமுக விழா' நவீனத்துவம், நுண்ணறிவு, பொழுதுபோக்கு மற்றும் கொண்டாட்டம் நிறைந்த அற்புதமான மாலை வேளையாக அமைந்தது மேலும் இதில் துறையில் வல்லவர்கள், சிந்தனை தலைவர்கள்,, நகைக் கடை உரிமையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆபரண பிரியர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் மிகப் பிரபலமான ஆபரண பிராண்டுகளுக்கானத் தேடல் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது.

UBM Indiaவின் IMP பிரசாரம், சமுதாயத்தை இணைத்து, மிகச் சிறந்த தரநிலைகளை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. மிகவும் விரும்பப்படும் பிராண்டுகளைக் கண்டுபிடிப்பதற்கான கருத்துகணிப்பு, மும்பை பங்கு வர்த்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இந்தியாவின் ஒரே சந்தை ஆராய்ச்சி நிறுவனமான MRSS உடன்  இணைந்து நடத்தப்பட்டது. இந்தியா முழுவதிலும் 20க்கும் மேற்பட்ட நகரங்களில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துகணிப்பில், ரூ. 12 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு குடும்ப வருமானத்தைக் கொண்ட பிரிவு A1 மற்றும் A2வைச் சேர்ந்தவர்கள் பதிலளித்துள்ளனர். இந்தக் கருத்துகணிப்பு நகைக் கடையின் நம்பிக்கைக் காரணி, கலெக்‌ஷன் மற்றும் தயாரிப்புகளின் வகைகள், பிராண்ட் பரிந்துரை, தயாரிப்பு & சேவை தரம், ஒட்டுமொத்த பிராண்ட் அங்கீகாரம் மற்றும் நினைவூட்டல் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது.

இந்தியாவில் ஆபரணக் கற்கள் மற்றும் நகைகளின் (G&J) சந்தை பல பிரிவுகளைக் கொண்டுள்ளது மேலும் இதில் 5,00,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆயினும், சமூக பொருளாதார காரணிகளுடன் நுகர்வோர் விருப்பமும் மாறி இருப்பதால், மிகவும் விரும்பப்படும் உலகளாவிய, தேசிய அல்லது வட்டார பிராண்டுகளின் அதிகரித்துவரும் எண்ணிக்கையை சமாளிக்க அதிவேக மாற்றங்களைச் செய்துவருகிறது.

'அறிமுக நிகழ்ச்சியில்' அறிவிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்டுகளுக்கு பிரபல ஆபரண வடிவமைப்பாளரான Poonam Soni-யால் இந்த நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஜொலிக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன. இப்போது அவர்களுக்கு ஆன்லைன் பிரசாரங்கள், விளம்பர பலகைகள், பத்திரிகை அறிவிப்புகள், பொருள் பேக்கேஜிங் மற்றும் விளம்பரம் போன்ற மார்க்கெட்டிங் தொடர்பான அவர்களின் தேவைகள் அனைத்திற்கும் மதிப்புமிக்க IMP லோகோவைப் பயன்படுத்த பிரத்யேக சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதிநவீன காபி டேபிள் புத்தகத்தின் அட்டை வடிவமைப்பும் இங்கு அறிமுகம் செய்யப்பட்டது, இதில் மிகவும் விரும்பப்படும் பிராண்டுகளின் விவரங்கள், அவற்றின் ஊக்கப்படுத்தும் வளர்ச்சி கதைகள், அவர்கள் எப்படி முக்கிய குறியீடாக பிரபலமடைந்தனர், எதிர்காலத்திற்கான அவர்களின் நோக்கம் என்ன ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

India's Most Preferred பிரசாரத்தை அறிமுகம் செய்து பேசிய திரு. Yogesh Mudras, நிர்வாக இயக்குநர், UBM India, கூறியதாவது, "புது டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் கண்காட்சிகள் மூலம் ஆபரணத் துறைக்குள் நுழைந்த பிறகு, விருதுகள், மாநாடுகள், சாலை கண்காட்சிகள், மற்றும் ஆடம்பரமான நிகழ்ச்சிகள், மிகச் சிறிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் India's Most Preferred பிரசாரம் மூலம் UBM India மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி மிகச் சரியான முன்னேற்றப் பாதையாகும். இந்தியா மதிப்புமிக்க ஆபரணத்தின் மீது விருப்பம் கொண்டிருக்கும் நாடு என்பது அனைவரும் அறிந்ததே. இந்தத் துறையில் எங்களுக்கு உள்ள நிபுணத்துவத்தின் மூலம், நாங்கள் உலக, தேசிய அல்லது உள்ளூர் பிராண்டுகளில் மிகப் பெரிய பிரிவுகளைக் கொண்டிருக்கும் சந்தைக்கு சாதகமாக செயல்படும் நவநாகரீகமான, பணக்காரர்களின் ரசனைகளும் விருப்பங்களும் அதிவேகமாக மாறிவருவதைப் பார்க்கிறோம். UBM Indiaவில் நாங்கள் வாடிக்கையாளர்களின் கருத்தினைக் கேட்டு, வாடிக்கையாளருக்கு பிடித்த பிராண்டுகள் எவை-ஏன்? என்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம். IMP மூலம், நாங்கள் நகைக்கடையின் நம்பிக்கை காரணி, கலெக்‌ஷன் மற்றும் தயாரிப்புகளின் வகைகள், பிராண்ட் பரிந்துரை, சேவைத் தரம், மற்றும் ஒட்டுமொத்த பிராண்ட் அங்கீகாரம் மற்றும் நினைவூட்டல் ஆகியவை இதற்கு முக்கிய காரணிகளாக இருப்பதாகத் தெரிந்துகொண்டோம்."

மேலும் அவர் கூறியதாவது: "IMP பிரசாரத்தின் கீழ் கெளரவிக்கப்பட்டுள்ள பிராண்டுகளுக்கு என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள். மிகவும் விரும்பப்படும் பிராண்டுகளின் பட்டியல் துல்லியமான, தீவிரமான, தனிப்பட்ட ஆராய்ச்சி மற்றும் கருத்துக்கணிப்பின் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த பிராண்டுகள் தொடர்ந்து இந்தத் துறையை வளர்ச்சியடையச் செய்யும் என்றும், மற்ற போட்டியாளர்களையும் இவ்வாறு செயல்பட ஊக்குவிக்கும் என்றும், இதன் மூலம் ஆபரண துறையில் இந்தியாவின் வளமான மரபை மேம்படுத்தும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்."

UBM India தற்போது இந்தியாவில் (டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் ஹைதராபாத்) நான்கு கண்காட்சிகளை ஏற்பாடு செய்திருக்கும், நாட்டின் முன்னணி ஆபரண கண்காட்சி ஏற்பாட்டாளராகும். உலகளவில், UBM ஹாங் காங், தாய்வான், ஐரோப்பா மற்றும் இஸ்தான்புல் ஆகிய நாடுகளில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்திய பொருளாதாரத்தில் G&J துறை முக்கியமான பங்கு வகிக்கிறது, இது நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட 6-7 சதவிகிதம் பங்களிக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் G&J துறையின் வளர்ச்சிக்கு,  ஒழுங்கமைக்கப்பட்ட சந்தைக்கு வழிகாட்டக்கூடிய, வளர்ச்சியடைவதற்குண்டான வாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடிய பெரிய ரீட்டெய்லர்கள்/பிராண்டுகளின் வளர்ச்சி மிகப்பெரிய காரணமாக இருக்கும். ஒழுங்கமைக்கப்பட்ட போட்டியாளர்களின் ஊடுருவல் அதிகரித்திருப்பதால் பல வகையான தயாரிப்புகளும் வடிவமைப்புகளும் கிடைக்கின்றன.

India's Most Preferred அறிமுக விழாவில் கெளரவிக்கப்பட்ட பிராண்டுகளின் பட்டியல்:

 கெளரவிக்கப்பட்ட பிராண்டுகளின் பட்டியல்  

List of felicitated brands 
Anand Jewels Pvt Ltd 
Bharti Jewellers Pvt. Ltd - Mumbai 
B.K. Saraf Pvt Ltd Jewellers
Ganpati Jewellers 
Hazoorilal Legacy Jewellers 
J S Solitaire 
Jagmohan Lal Shivratan Lal Jewellers 
K.K Jewels 
Kalaneedhi Jewellers, Patiala 
Kashi Jewellers 
Khurana Jewellery House 
Leela Jewels 
Mahabir Danwar Jewellers Pvt Ltd 
Manepally Jewellers 
Mangatrai Jewellers Since 1905 
M.O.D Signature Jewellery 
Mor Jewellers 
Motisons Jewellers Ltd 
Ranka Jewellers, Pune 
Ranujee Jewellers 
Shobha Shringar Jewellers 
Shree Menghraj and Bros 
Swarn Shree Jewels 
Takat Gems India 
Tibarumal Gems & Jewels 
Vishal Metallurgical Works 
AVR Jewellers 
Chennai Diamonds Jewellers Pvt. Ltd 
DP Jewellers 
Fiona Solitaires 
GRT Jewellers 
NAC Jewellers 
Navrathan Jewellers Pvt Ltd 
P.N Gadgil Jewellers Pvt Ltd. 
Prince Jewellery 
Saheli Jewellers 
Sawansukha Jewellers Pvt. Ltd 
Waman Hari Pethe Jewellers 
Nakshatra World 
Joyallukas 
Senco Gold & Diamonds 
Tanishq 
TBZ - The Original

UBM India பற்றி:    

UBM India, இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும். இது உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களையும் விற்பனையாளர்களையும் பல கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் இணைப்பதற்கான மேடைகளை வழங்குகிறது. UBM India ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதிலும் பெரிய அளவில் 25 கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகிறது. இதனால் பல துறைகளின் வணிகத்திற்கு வழிவகுக்கிறது. UBM Asia கம்பெனியின் UBM India மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM Asia-வின் உரிமையாளர் UBM plc ஆகும். இது லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia என்பது ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும். இது மெய்ன்லேண்ட் சீனா, இந்தியா மற்றும் மலேசியாவில் உள்ள மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளராகும்.

மேலும் விவரங்களுக்கு, பார்க்கவும்: http://www.ubmindia.in.

UBM plc பற்றி:  

UBM plc என்பது உலகிலேயே மிகப் பெரிய பிரத்யேக B2B நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகும். வளர்ந்துவரும் டிஜிட்டல் உலகில், மனிதர்கள் ஒரு காரணத்திற்காகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். UBMல் எங்களின் ஆழமான அறிவும், நாங்கள் செயல்படும் இந்தத் துறையில் எங்களுக்கு உள்ள ஆர்வமும் மக்கள் வெற்றிப் பெறுவதற்கான சிறந்த அனுபவங்களை உருவாக்க எங்களுக்கு உதவுகிறது. எங்களின் நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளைக் கட்டமைத்து, வணிகம் செய்து, தங்கள் தொழிலை வளர்ச்சியடைய செய்கின்றனர். எங்களின் 3,750+ உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளனர், இவர்கள் 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளில் செயல்படுகின்றனர். இதில் ஃபேஷன் முதல் மருந்து தயாரிப்பு உட்பொருட்கள் வரை அனைத்தும் அடங்கியிருக்கும். இந்த உலகளாவிய நெட்வொர்க் திறமிக்க, ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைத்து, வியாபாரிகள் தங்கள் இலங்குகளை அடைய அற்புதமான வாய்ப்புக்களை அளிக்கும் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

மேலும் தகவலுக்கு, http://www.ubm.com; UBM கார்ப்பரேட் செய்திக்கு, ட்விட்டரில் @UBM, லிங்கெடினில் UBM Plc-யில் பின்தொடருங்கள்.

ஊடகம்த் தொடர்பு :
UBM India
Roshni Mitra
roshni.mitra@ubm.com

Mili Lalwani
mili.lalwani@ubm.com
+91-22-61727000

SOURCE UBM India Pvt. Ltd. 

Get content for your website

Enhance your website's or blog's content with PR Newswire's customised real-time news feeds.
Start today.

 

 
 

Contact PR Newswire

Send us an email at indiasales@prnewswire.co.in or call us at +91 22 6169 6000

 

 
 

Become a PR Newswire client

Request more information about PR Newswire products & services or call us at +91 22 6169 6000

 

 
  1. Products & Services
  2. Knowledge Centre
  3. Browse News Releases
  4. Contact PR Newswire