CPhI-P-MEC இந்தியா கண்காட்சி 2017 ஃபார்மா துறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறது

மும்பை, December 15, 2017 /PRNewswire/ --

இந்திய ஃபார்மா வீக், நிகழ்ச்சிக்குடைகளின் கீழ் UBM இந்தியா விரிவான, பாதையை முற்றிலும் மாற்றக்கூடிய ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய பல நிகழ்ச்சிகளுடன் தொழில்துறையை கொண்டாடுகிறது.  

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஃபார்மா நிகழ்வு ஒரு பார்வை:  

- 550+ காட்சியாளர்கள்

- கடந்த வருடத்தைவிட பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 20 சதவீத அதிகரிப்பு

40 நாடுகள் பங்கேற்பு

-2 வெவ்வேறு இடங்களில் 4 நாள் கண்காட்சிகள்

- 2வது இந்திய ஃபார்மா வீக்கில் மும்பையின் பல்வேறு பகுதிகளில் 10க்கு அதிகமாக நிகழ்ச்சிகள்

- புதுமை- கேலரி, சப்ளையர்- தேடுபவர், கண்காட்சியாளர் ஷோகேஸ், ஆன்சைட் பொழுதுபோக்கு- இந்த அம்சங்கள் பங்கேற்பாளர்களை ஈடுபட வைத்தது.

- ஃப்ரீ-கனெக்ட், மருந்து துறையில் பெண்கள் மேலும் CEO வட்டமேசை போன்ற மிக முக்கிய தலைமைத்துவ நிகழ்ச்சிகள். தொழிலக தலைவர்களின் பரிந்துரைப்படி ஒரு வெள்ளை தாள் அறிக்கை, முக்கிய கொள்கை உருவாக்குபவர்கள் மற்றும்  முன்னோக்காளர்கள் ஆகியோருக்கு வழங்க தயாரிக்கப்பட்டுள்ளது.

-இந்த வருடம் 145 நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 270 நபர்கள் 5து எடிசன் இந்திய ஃபார்மா விருதுகளை பெற்றார்கள், இது கடந்தவருடத்தைவிட 35 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது.

UBM இந்தியா, இந்தியாவின் முன்னணி B2B கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள், மருந்துதுறையை ஊக்கப்படுத்தி அதன் நிலையை மேலும் உயர்த்த CPhI & P-MEC India 2017ன் 11வது எடிசன் என்ற மிக முக்கிய நிகழ்ச்சியை, இரு வேறு இடங்களில் Mumbai - MMRDA MMRDA Grounds, Bandra-Kurla Complex (27ஆம்தேதி முதல் 29 நவம்பர் வரை) மேலும் Bombay Exhibition Centre (28 ஆம்தேதி முதல் 30 ஆம்தேதி நவம்பர் வரை) கொண்டாடுகிறது. இதுவரை செய்த சாதனையை முறியடிக்கச் செய்யும் அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான கண்காட்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுடன், கண்காட்சியின் முக்கிய பாகமான 2nd India Pharma Weekகில் நடந்த, வேலை வாய்ப்புகள் மற்றும் முக்கிய தொழில் ஆய்வுகளை இணைக்கத் தேவையான, டொமைன்களின் வெவ்வேறு பகுதிகளை பற்றிய , விரிவான வெளிப்படையான பேசும் திட்டங்கள் ஆகியவற்றால் இந்த பெரிய கண்காட்சி தளத்தில் எதிர்பாராத வெற்றியை அடைந்துள்ளது,

     (Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
      (Photo: http://mma.prnewswire.com/media/619649/UBM_CPhI_P_MEC_Inauguration.jpg )
CphI &P-MEC இந்தியா கண்காட்சி, எம்எம்டிஏ கிரௌன்ட்ஸ்,பாந்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் , ஆடம்பரமாக நவம்பர் 27ஆம்தேதி அன்று தொடங்கிய  கண்காட்சி துவக்கவிழாவில் தொழில்துறை தலைவர்களான Shri. Satish Wagh, Chairman, Chemexcil; Mr. Jime Essink, Chief Executive Officer, UBM Asia Ltd; Mr. Aasif Khan, Director, Fabtech Technologies; Mr. Rajendra Khimsaria, Director, Khimsaria Associates; Mr. Khaja Nizamuddin, Director, Pharmapack Packaging  Equipment; Mr. Yogesh Mudras, Managing Director, UBM India; and Mr. Rahul Deshpande, Group Director, UBM India, இவர்களுடன் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கண்காட்சி Bombay Exhibition Centre-ல் நவம்பர் 28 அன்று துவக்கப்பட்டது.

CPhI உலகம்முழவதும் பரவியிருந்தாலும், 2006 ஆம் ஆண்டுதான் இந்தியாவில் CPhI & P-MEC இந்தியா அறிமுகமானது. தெற்கு ஆசியாவின்  முன்னணி ஃபார்மா மீட்டிங் இடமாக இன்று மாறியிருக்கும் இது, மருந்நது கண்டுபிடிப்பு முதல் முடிக்கப்பட்ட டோஸேஜ் வரை சப்ளை செயினின் ஒவ்வொரு படியையும் இணைத்துள்ளது. CROs, CMOs மற்றும் API தயாரிப்பாளர்கள், ஜெனரிக்ஸ், எக்சிபியன்ட்ஸ்(மருந்து கலவையின் செயலற்ற பொருள்) மற்றும் மருந்து  உருவாக்கம், ஃபைன் கெமிக்கல்ஸ், பயோ சிமிலர்ஸ், முடிக்கப்பட்ட உருவாக்கம், ஆய்வக இரசாயனங்கள் மற்றும் பயோடெக்னாலஜி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தொழில் தளமாக CPhI இந்தியா செயல்படுகிறது. மற்றொரு வகையில்  P-MEC, மருந்து இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், ஆய்வு உபகரணம், ஆட்டோமேசன் மற்றும் ரோபோட்டிக், பேக்கேஜிங் உபகரணம் மற்றும் சப்ளைஸ், பிளான்ட் அல்லது தொழிற்சாலை உபகரணம், ஆட்டோமேசன் மற்றும் கட்டுப்பாடுகள், செயல்முறை உபகரணம், RFID,டேப்ளட்டிங் அல்லது கேப்சூல் ஃபில்லர்ஸ், க்ளீன் ரூம் உபகரணம், ஃபில்லிங் உபகரணம் மற்றும் ஆய்வக தயாரிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.

கடந்த சில வருடங்களாக இந்த கண்காட்சி, பலமட்ட அளவிலான வர்த்தகத்துடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காட்சியாளர்களையும் கவர்ந்திழுத்துள்ள நிலையில், வளர்ந்து வரும் இந்திய ஃபார்மா துறையின் பேரோமீட்டராக (காற்றழுத்தமானியாக) மாறியுள்ளது. இந்த வருடம், கண்காட்சியில் சப்ளையர்- ஃபைன்டர் டெஸ்க் (பார்வையாளர்கள் சேவைகள் மற்றும் கம்பெனி பெயர்களை கொண்டு காட்சியாளர்களை கண்டறிய உதவும் ஒரு டிஜிட்டல் தளதிட்டம்), புதுமை கேலரி ( பங்குகொள்ளும் மருந்து நிறுவனங்கள் தங்கள் புதுமையான கண்டுபிடிப்புகள் சர்வதேச தளத்தில் காட்சிப்படுத்த தூண்டப்படும் உற்சாக அரங்கம்) எக்சிபிடர் ஷோகேஷ் (காட்சியாளர்கள் தங்கள் புதிய அறிமுக தயாரிப்புகள் எவ்வாறு பயன்தரப்போகின்றன என்பதை விளக்கும் ஒரு தளம்) போன்ற பல உற்சாகமூட்டும் விஷயங்கள் உள்ளன.

இந்த வருட CPhIன் 2017 வது பதிப்பு கண்காட்சியில் இடம்பெறும் முக்கிய கம்பெனிகள் Aurobindo Pharma Ltd., Granules India Pvt. Ltd., Hetero Labs Limited, Signet Chemical Corporation Pvt. Ltd, DKSH India Pvt. Ltd., Morepen Laboratories Limited, N V Organics Pvt. Ltd. மற்றும் பல. அதே போன்று P-MEC கண்காட்சியில் முன்னணி நிறுவனங்களான West Pharmaceuticals Packaging India Pvt. Ltd., Cadmach Machinery Co. Pvt. Ltd., Brothers Pharmamach (I) Pvt. Ltd, NPM Machinery Pvt. Ltd., Jekson Vision Pvt. Ltd., ACG Worldwide Solid Dosage Consumables and Machinery, Ace Technologies & Packaging Systems Pvt. Ltd, Fabtech Technologies International Ltd., Jagson Engineers, Bosch Limited, Agilent, Food & Pharma Specialities பங்கு கொள்வார்கள்.

கண்காட்சியுடன், India Pharma Week (IPW)ன் இரண்டாவது பதிப்பை UBM இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது, இந்தியாவில் CPhI& P-MEC ன் பத்துவருடங்களை கொண்டாட கடந்தவருடம் கவர்ச்சிகரமான 10க்கும் அதிகமான டிரென்ட் -செட் செய்யும் நிகழ்ச்சிகளை வழங்கியது. வர்த்தகம், அறிவு, தலைமை, கண்டுபிடிப்பு, ஃபார்மா போன்ற தலைப்புகளில் ஏற்றுக்கொள்ளப்படுதல் மற்றும் நெட்வொர்க்கிங் போன்ற  முக்கிய தூண்களில் கவனத்தை செலுத்தி , IPW பிளான்ட் விசிட், ஃபார்மா தலைவர்களின் குறிக்கோள், ஃபரீ-கனெக்ட் சங்கமம், ஃபார்மாவில் பெண்கள், இந்திய ஃபார்மா அவார்டுகள் & நெட்வொர்க்கிங் மாலை , மூடப்பட்ட கதவு CEO வட்டமேசை மேலும் அதிமான நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ளது. IPW, CPhl &P-MEC கண்காட்சியை சுவருக்குள் அடங்கிய ஷோவாக அல்லாமல், புதிய டிரென்டுகள், தொழில் ஒப்பந்தங்கள் மற்றும் உள்கண்ணோட்டங்கள் அனைத்தும் அடங்கிய கண்காட்சியாக மாற்றியுள்ளது.

ஏற்கனவே நன்றாக திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியான IPW உடன் CPhl &P-MEC கண்காட்சியில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறிப்பிட்டதக்க வகையில் அதிகரித்ததன் காரணமாக  இன்னும் பல விரிவான நிகழ்ச்சிநிரல்கள்  சோதனை- அடிப்படையிலான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவை தொழில்துறையை அடுத்த நிலைக்கு கொண்டு  செல்லும் முற்போக்கு சிந்தனையுள்ள தலைமை மற்றும் வியாபாரத்தை உருவாக்க,  வாடிக்கையாளர்களிடமிருந்தும் உலகெங்கிலுமுள்ள தொழில் வல்லுநர்களிடமிருந்தும்  அரசாங்க அமைப்புகளிடமிருந்தும் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் நற்சான்றிதழ்களை அடிப்படையாக கொண்டவை.  இதில் பங்கேற்ற UBMமின் உலக தலைமை குழுவின் - Mr Tim Cobbold, CEO, UBM plc; Ms Marina Wyatt, CFO, UBM plc; Mr Jime Essink, CEO, UBM Asia; Mr Michael Duck, Executive Vice President, UBM Asia, ஆகியோரை கண்காட்சியில் UBM இந்தியா கௌரவித்தது.

இந்தியா ஃபார்மா வீக் 2வது பதிப்பின் தாக்கத்தை மதிப்பிட்டு மேலும் CPhI & P-MEC India 2017 தொடக்கவிழாவில் UBM இந்தியாவின் மேனேஜிங் டைரக்டர் Mr Yogesh Mudras, பேசுகையில், "IPW உடன் இணைந்த CPhl-P-MEC கண்காட்சியின் ரெகார்டு பிரேக்கிங் பங்கேற்பு இந்த தொழிலின் ஒட்டுமொத்த வலிமையை வெளிப்படுத்தி மேலும் நம்முடைய வழங்கல்கள் உலகளாவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை யும் வெளிப்படுத்தியுள்ளது.  IPW ன் தூண்டுதலுடன், அதிகமான மற்றும் மிகவும் அத்தியாவசியமான கருத்துக்களுடன் மேலும் தொழில்துறையின் வளர்ச்சியுடன் இணைந்து பணியாற்ற சப்ளை செயினின் பல்வேறுசெயல்பாடுகளின் வேகத்துடன் இணைந்து நாம் பணியாற்றியுள்ளோம். கண்காட்சி இந்த தொழில்துறையின் முக்கியமான தளமாக மட்டுமல்லாமல், இதன் நிகழ்ச்சிகள் கொள்கை முயற்சிகளை தூண்டும் என்பதையும் மேலும் ஃபார்மா துறையை மேம்படுத்தும் எதிர்கால கண்டுபிடிப்புகளை இது தூண்டும் என்பதையும் நாம் அறிந்துள்ளோம். இது, எமது தளங்கள் மற்றும் முயற்சிகள் மேம்பாடு அடைய தொடர்ச்சியாக உறுதிப்படுத்த எங்களுக்கு பெரும் தூண்டுதலாக அமைகிறது."

சமீபகாலத்திய பத்தாண்டுகளில், இந்திய மருந்து பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி  பெற்று உலகின் சிறந்த ஃபார்மசியாக மாறியுள்ளது. இது சமீபகாலமாக குறைந்திருந்தாலும் தற்போது தொழில் மறுபடியும் வலுவாக வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. கூட்டு ஆண்டு வருமான வளர்ச்சி 17.6%; 2020ல் இந்திய ஃபார்மாவின் மதிப்பு 55 பில்லியன் யுஎஸ் டாலராக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதனுடன், இந்திய உயிர் அறிவியல் பிரிவான இதில் 2022க்குள் 3.5 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவாய்ப்புள்ளது, கடந்த பத்தாண்டுகளைவிட இது 100% அதிகம். தன்னுடைய உறுதி, இலட்சிய அணுகுமுறை, புதுமைக்கான வரலாறு மற்றும் மாறிவரும் உலகச்சந்தைக்கேற்றவாறு தொடர்ந்த மாற்றம் போன்றவைகளினால் இந்திய ஃபார்மா துறை வெற்றியை அடைந்துள்ளது.

UBM இந்தியா பற்றி :   

UBM இந்தியா, இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர், கண்காட்சிகளின் போர்ட்ஃபோலியாக்களின் மூலமாகவும், கருத்தை முன்னிறுத்திய கருத்தரங்குகள் மற்றும் செமினார்கள் மூலமாகவும் உலகெங்கிலும் உள்ள வாங்குபவர்களையும் விற்பவர்களையும் இணைக்கும் தொழில் பிளாட்ஃபார்மாக செயல்படுகிறது. ஒவ்வொரு வருடமும் UBM இந்தியா 25க்கும் அதிகமான பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 கருத்தரங்குகளையும் நடத்தி, பல்வேறு தொழில் தலைமைகளுக்கிடையே வியாபாரத்தை நடத்த வாய்ப்பை அளித்திருக்கிறது. UBM ஏசியா கம்பெனியின் கிளையான, UBM இந்தியா கம்பெனிக்கு மும்பை, புது டில்லி, பெங்களுரூ மற்றும் சென்னை ஆகியவற்றில் கிளைகள் உண்டு. லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ள UBM பிஎல்சிக்கு சொந்தமானது UBM ஆசியா. UBM ஆசியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராக இருக்கிறது மற்றும் சீனா, இந்தியா மற்றும் மலேசியா போன்ற முக்கியநாடுகளின் மிகப்பெரிய வியாபார ஒருங்கிணைப்பு தளமாகவும் செயல்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு, தயவு செய்து செல்லவும்  http://ubmindia.in.

UBM plc பற்றி :   

UBM plc, உலகின் மிகப்பெரிய pure-play B2B நிகழ்ச்சி ஒருங்கிணைபாளர்களாவர். பெருகி வரும் டிஜிட்டல் உலகில், அர்த்தமுள்ள மனித அளவிலான தொடர்பு மிகவும் முக்கியமானது. UBMமில், தொழில்துறையில் எங்கள் ஆழ்ந்த அறிவு மற்றும் வழிமுறையால், மக்கள் வெற்றிபெறக்கூடிய அனுபவங்களை உருவாக்க நாங்கள் உழைக்கிறோம். எங்களுடைய நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளை உருவாக்குகிறார்கள், ஒப்பந்தங்கள் செய்கிறார்கள் மற்றும் தங்கள் வியாபாரத்தை வளர்க்கிறார்கள். 20 நாடுகளில், 3,750+ அதிகமான நபர்களுடன் இருக்கும் நாங்கள், ஃபேஷன் முதல்   மருந்துப்பொருட்கள் வரையிலான 50 வெவ்வேறு பிரிவுகளிலும் சேவை செய்துள்ளோம். உலகளாவிய நெர்வொர்க், திறமை வாய்ந்த, வழிமுறையுடைய மக்கள் மற்றும் சந்தை-முன்னிலை நிகழ்ச்சிகள் இவை வியாபார மக்கள் தங்கள் குறிக்கோள்களை அடைய உற்சாகமான வாய்ப்புகளை அளிக்கிறது.

மேலும் அதிக தகவல்களுக்கு , செல்லவும் http://www.ubm.com; UBM கார்ப்பரேட் செய்திகளுக்கு, ட்விட்டரில் எங்களை பின்பற்ற Twitter at @ UBM,UBM Plc LinkedIn

Media Contact: 
Roshni Mitra / Mili Lalwani
roshni.mitra@ubm.com / mili.lalwani@ubm.com
+91-22-61727000
UBM India

SOURCE UBM India Pvt. Ltd. 

Get content for your website

Enhance your website's or blog's content with PR Newswire's customised real-time news feeds.
Start today.

 

 
 

Contact PR Newswire

Send us an email at indiasales@prnewswire.co.in or call us at +91 22 6169 6000

 

 
 

Become a PR Newswire client

Request more information about PR Newswire products & services or call us at +91 22 6169 6000

 

 
  1. Products & Services
  2. Knowledge Centre
  3. Browse News Releases
  4. Contact PR Newswire