MoneyOnMobile மற்றும் மஹாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகம் (MSRTC) இணைந்து கூட்டாக பஸ் டிக்கெட்டுகளுக்கு சலுகைகளை அறிவித்துள்ளன

மும்பை, March 7, 2018 /PRNewswire/ --

1960ல் மஹாராஷ்டிர அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மஹாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகத்துடன் (MSRTC), Money On Mobile, இன்க் (OTCQB: MOMT) கூட்டுறவை அறிவித்துள்ளது. இந்த கூட்டுறவால் கிட்டத்தட்ட 17,000 வழித்தடங்களில், தினந்தோறும் MSRTC வழியாக பயணம் செய்யும் 7 மில்லியன் பயணிகளுக்கு பஸ் டிக்கெட்டுகளை பதிவு செய்ய MoneyOnMobile ல் பங்குகொண்டுள்ள விற்பனையாளர்கள் ஈடுபடுவார்கள்.

     (Logo: https://mma.prnewswire.com/media/650303/MoneyOnMobile_Logo.jpg )

'இந்த கூட்டுறவால், நம்முடைய வாடிக்கையாளர்கள் தங்கள் MSRTC டிக்கெட்டுகளை MoneyOnMobile ல் பங்குகொண்டுள்ள எந்த விற்பனை தளங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம். இதனால் நம்முடைய வாடிக்கையாளர்கள் மஹாராஷ்டிராவிற்குள்ளும் வெளியேயும் தங்கள் வசதிப்படி பயணம் செய்ய முடியும். MSRTC பாதுகாப்பான மற்றும் சார்பான சேவை அமைப்பாகும்,' இவ்வாறு சுகாஸ் ஜாதவ் MSRTC ன் துணை ஜிஎம் தெரிவித்தார்.

'நாங்கள் எங்கள் சேவையை எங்களுடைய விற்பனையாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். கிடைக்கும் சேவைகளில் எங்களின் தயாரிப்பு போர்ட்ஃபோலியாவை நாங்கள் விரிவாக்கும்போது, எங்களுடன் இணைந்துள்ள விற்பனையாளர்களுக்கும் அதிகளவு வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க வாய்ப்பு உருவாகும், மற்றும் அவர்களின் கடையில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கான- செலவும் அதிகமாகும்' என MoneyOnMobile இன்க்-ன் சேர்மன் மற்றும் சிஈஓ வான ஹெரால்டு மான்ட்கோமரி தெரிவித்தார்.

MoneyOnMobile, இந்தியா, ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டர் ரஞ்சீத் ஓக் கூறுகையில், 'இந்தியாவின் மேற்கு பகுதியில் இருக்கும் எங்கள் விற்பனையாளர்கள் குறிப்பாக மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் விற்பனையாளர்கள் மாநிலத்திற்கு உள்ளும் வெளியேயும் பஸ் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகரிப்பதை காணுகிறார்கள்; நாங்கள் பஸ் டிக்கெட் பதிவு செய்யும் சேவையை அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பெரும்பான்மையாக மஹாராஷ்டிரா மற்றும் அருகில் இருக்கும் மாநிலங்களான கோவா, தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகியவற்றிற்கு பயணம் செய்யும் பஸ்களில் பஸ் டிக்கெட் பதிவு செய்யும் சேவை நமது விற்பனையாளர் வழியாக  இறுதி பயனாளர்களுக்கு அளிக்கப்படும்'.

MSRTC பற்றி:

மஹாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகம், MSRTC எனவும் அல்லது எளிதாக ST எனவும் குறிக்கப்படுகிறது. இது இந்தியாவில் மஹாராஷ்டிர மாநில அரசாங்கத்தினால் அளிக்கப்படும் பஸ் சேவையாகும் இதில் 16,500 பஸ்களும் அதில் தினமும் 7மில்லியன் பயணிகளும் பயணிக்கின்றனர். இது மஹாராஷ்டிராவிலிருக்கும் சிறு-நகரங்கள் மற்றும் பெரு-நகரங்கள்  மற்றும் அருகிலிருக்கும் மாநிலங்களுக்கும் பஸ் சேவையை அளித்து வருகிறது. மஹாராஷ்டிர மாநிலத்திற்குள்ளே இருக்கும் இடங்களை தவிர்த்து அருகிலிருக்கும் மாநிலங்களுக்கும் MSRTC சேவையை அளித்துவருகிறது. இது அனைத்து பஸ்களுக்கும் ஆன்லைன் முறையில் டிக்கெட் பதிவு செய்யும் வசதியையும் அளிக்கிறது.

MoneyOnMobile பற்றி 

இந்திய வாடிக்கையாளர்கள் மொபைல் ஃபோன்களை பயன்படுத்தி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்தவும் மேலும் ஒரு செல்ஃபோனிலிருந்து மற்றொன்றுக்கு பணம் அனுப்பவும் MoneyOnMobile வசதிகளை தருகிறது. இதனை எளிதாக எஸ்எம்எஸ் செயல்பாடாக மட்டும் பயன்படுத்தலாம் அல்லது MoneyOnMobile அப்ளிகேசன் அல்லது இன்டர்நெட் சைட் மூலமும் பயன்படுத்தலாம். இந்தியா முழுவதும் MoneyOnMobileக்கு 350,000க்கும் அதிகமான விற்பனை இடங்கள் உள்ளன.

பாதுகாப்பான இருப்பு அறிக்கை 

இந்த வெளியீடானது, ஏதேனும் நிறுவனம் எந்த பத்திரங்களையும் வாங்குவதற்கான சலுகைகளையோ அல்லது விற்பதற்கான சலுகைகளையோ கொண்டிருக்கவில்லை. இந்த வெளியீடானது எங்களது தற்போதைய எதிர்பார்ப்புகள், முன்னறிவிப்புகள் மற்றும்  அபாயங்கள் மற்றும் நிச்சயமற்றவைகளை கொண்டுள்ள ஊகங்கள் அடிப்படையில் முன்-நோக்கு அறிக்கைகளை கொண்டிருக்கிறது. இம்மாதிரி முன்-நோக்கு அறிக்கைகளில் கொடுக்கப்பட்டுள்ள அல்லது எதிர்பார்க்கப்பட்டுள்ள பலன்களைவிட உண்மையான பலன்கள் வேறுபடலாம், இதற்கு எங்களுடைய பார்ம் 10-கே ஜூலை 6, 2017 அன்று பைல் செய்யப்பட்டது உள்ளிட்ட  எமது வியாபாரத்திலுள்ள ஆபத்துக்கள் மற்றும் நிச்சயமின்மைகள் காரணமாக இருக்கலாம். எதிர்காலத்தை பற்றிய எங்களது எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், தூண்டுதல்கள் அல்லது கோட்பாடுகள் போன்றவை அடிப்படையில் முன்னோக்கு அறிக்கைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது மேலும் முன்னோக்கு என்பதன் இணை வார்த்தைகளான 'எதிர்நோக்கு', 'நம்பிக்கை', 'இயலும்', 'மதிப்பீடு', 'எதிர்பார்ப்பு', 'உளங்கொல்', 'இருக்கலாம், 'வேண்டும்' மேலும் 'என்று' அல்லது அதே மாதிரியான வார்த்தைகள் மூலம் இதனை கண்டறிய இயலும். புதிய தகவல்கள், எதிர்கால நிகழ்வுகள் அல்லது பிறவற்றின் விளைவாக , இந்த பிரஸ் வெளியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள தகவல்களை புதுப்பிக்க எவ்வித பொறுப்பும் எங்களுக்கு இல்லை என நாங்கள் கருதுகிறோம்.

வெப்சைட்: http://www.MoneyOnMobile.in
Twitter: https://twitter.com/MoneyOnMobile
Facebook: https://www.facebook.com/MoneyOnMobile
LinkedIn: https://www.linkedin.com/company/moneyonmobile 
YouTube: http://www.youtube.com/c/MoneyOnMobileofficial

மீடியா தொடர்பு :
Navaz Damania
navaz.damania@moneyonmobile.in
+91-9167122661
Vice President - Corporate Communications
MoneyOnMobile

SOURCE MoneyOnMobile



 

Get content for your website

Enhance your website's or blog's content with PR Newswire's customised real-time news feeds.
Start today.

 

 
 

Contact PR Newswire

Send us an email at indiasales@prnewswire.co.in or call us at +91 22 6169 6000

 

 
 

Become a PR Newswire client

Request more information about PR Newswire products & services or call us at +91 22 6169 6000

 

 
  1. Products & Services
  2. Knowledge Centre
  3. Browse News Releases
  4. Contact PR Newswire