UBM India, Chennai Jewellery & Gem Fair (CJGF) 2018 ன் அறிமுக பதிப்பை வெற்றிகரமான குறிப்புடன் நிறைவு செய்தது.

 

சென்னை, இந்தியா, October 24, 2018 /PRNewswire/ --

தெற்கு இந்தியாவின் திறமையின் மீது சிறப்பு கவனத்துடன் இந்திய நகைச்சந்தைக்கான வாயில்  

இந்தியாவின் மிகப்பெரிய நகை கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களான UBM India, Chennai Jewellers Association உடன் இணைந்து இந்த வருடத்தின் மிக முக்கியமான முயற்சிகளில் ஒன்றான தெற்கு இந்தியாவில் முதல்தரமான சர்வதேச B2B நகை கண்காட்சியான Chennai Jewellery & Gem Fair (CJGF) அறிமுகப்படுத்தியது. சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற மூன்று நாள் கண்காட்சி ( 20- 22 அக்டோபர் , 2018)யில் 150க்கும் அதிகமான கண்காட்சியாளர்களும் 300க்கும் அதிகமான பிராண்டுகளும் இடம்பெற்றன.

     (Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
     (Photo: https://mma.prnewswire.com/media/769002/CJGF_October.jpg )
     (Photo: https://mma.prnewswire.com/media/773333/UBM_CJGF.jpg )
     (Photo: https://mma.prnewswire.com/media/773334/UBM_Kushboo.jpg )

கண்காட்சியின் முதல் பதிப்பு தலைமை விருந்தினர்- ஸ்ரீ.திரு ,பன்வாரிலால் புரோகித், மரியாதைக்குரிய தமிழ்நாட்டின் கவர்னர், அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது; திரு.யோகேஷ் ஷா, தலைவர்- சென்னை ஜ்வல்லர்ஸ் அசோசியேசன்; திரு.உதய் வம்மிடி (Mr. Uday Vummidi), துணை தலைவர்- சென்னை ஜ்வல்லர்ஸ் அசோசியேசன்; திரு.மைக்கேல் டக், Executive Vice President, UBM Asia மற்றும் திரு.யோகேஷ் முத்ராஸ், Managing Director, UBM India ஆகிய பிற முக்கியமானவர்கள் நகை வர்த்தக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சென்னையில் நடைபெற்ற வெற்றிகரமான நகை கண்காட்சிகளின் வரிசையில், சென்னையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட CJGF அதன் புதுப்பிக்கப்பட்ட தோற்றத்தினால், சர்வதேச அனுபவத்தை வழங்கியது. இது உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச சந்தையை உணர்ந்த ஒருங்கிணைப்பாளரின் திறமையை எடுத்துக்காட்டியது.

 ஆடம்பர பெவிலியன், கைவினைஞர் பகுதி, வடிவமைப்பாளர் கேலரி மற்றும் நெட்வொர்க்கிங் நைட் போன்றவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் கண்காட்சியில் இடம்பெற்றது. கண்காட்சியின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக மூன்றுநாள் ஆழ்ந்த கருத்தரங்கு அமைந்தது. நாள் 1ல் Gemmological Institute of India ஆல் நடத்தப்பட்ட' செயற்கை வைரங்களை கண்டறிதல்' கருத்தரங்கு நடைபெற்றது. மேலும் 'உங்கள் வியாபாரம் மற்றும் இலாபத்தை எவ்வாறு அதிகரிப்பது' என்ற கலந்தாலோசணையும் நடைபெற்றது. நாள் 2 மற்றும் நாள் 3ல் ' நகை வர்த்தகத்தில் இளம் தலைமுறையினர்' என்ற கலந்தாலோசணை நடைபெற்றது. மேலும் 'க்ளஸ்டர்களுக்கான MSMEல் உள்ள திட்டங்கள்', சில்லரை வியாபாரிகளுக்கான இலாப சோதனை மற்றும் இருப்பு மேலாண்மை மற்றும் சில்லரை விற்பனையில் உங்கள் ஊழியர்கள் எவ்வாறு உங்களுக்கு உதவலாம் போன்ற கலந்தாலோசணைகளும் இடம்பெற்றன.வைரங்களை சோதிப்பதில் உள்ள தற்கால பிரச்சினைகள்: Gemological Institute of Indiaல் ஏற்பட்ட அனுபவம் மற்றும் 'நகைவிற்பனை செய்பவர்களுக்கான டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற புதிய யுத்திகள் இடம்பெற்றன. கண்காட்சியில் Madras Gem Museum and Gem Institute Chennai உதவியால் Gem Museum ஒன்றும் நடைபெற்றது. இதில் 2,000க்கும் அதிகமான அரிதான மற்றும் விலைமதிப்புமிக்க ஜெம்ஸ்டோன்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இது பிரபலமான தென் இந்திய நடிகையான குஷ்பூ அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த கண்காட்சியானது நகை மொத்தவிற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், நகை உற்பத்தியாளர்கள், வைரம், இரத்தினகற்கள், முத்து சப்ளையர்கள் மற்றும் வியாபாரிகள், விலைமதிப்புள்ள உலோகம் மற்றும் நகை மௌன்டிங் வியாபாரிகள் மற்றும் சப்ளையர்கள் மற்றும் இயந்திர உற்பத்தியாளர்கள் பிற வர்த்தக மற்றும் அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு சிறந்த தளமாக ஒரே கூரையின் கீழ் இணைய, நெட்வொர்க் செய்ய மற்றும் வியாபாரத்தை அதிகரிக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இந்தியாவின் டையர் I, II மற்றும் III நகரங்களுடன் கூடுதலாக சிங்கப்பூர், பங்களாதேஷ்,நேபாளம் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் மலேசியா மற்றும் பிற நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் பங்குகொண்டனர்.

இந்த வருட கண்காட்சியாளர்களில் முக்கியமானவர்கள்- Anmol Jewellers, CNB Diamonds Pvt. Ltd., JKS Jewels Pvt. Ltd., Anmol Swarn (India) Pvt. Ltd., S.K. Jewels, The Bombay Jewel Case Co, Mehta Gold and Diamonds, Madhava Raghava Jewellers LLP, M M Gold Palace, D N Jewels, UTSSAV CZ Gold Jewels Ltd., White Fire Diamonds India Pvt. Ltd. and Kalinga Jewellers, Jai Gulab Dev, Laxmi Chains, Jewel 4 u, Navkar Sterling, Sankalp Jewels, Swarn Shanthi, P.R Jewellers, Ms Diagem மற்றும் பலரும் ஆவர்.

CJGF ன் இளம் பதிப்பின் நிறைவு விழாவில் பேசுகையில், Mr. Yogesh Mudras, Managing Director, UBM India, பின்வருமாறு கூறினார், ' நகை தொழில்துறைக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இந்த துறையில் பல வாய்ப்புகள் உள்ளன ஏற்றுமதி- தொடர்புடையது மற்றும் தொழிலாளர் செறிவு ஆகியவை இதற்கு உதாரணங்களாகும், இவற்றால் இந்தியா உலக நகை சந்தையின் கூடுமிடமாக மாறி வருகிறது. வரும் காலங்களில், பெரிய சில்லரை விற்பனையாளர்கள்/ பிராண்டுகளால் இரத்தினங்கள்மற்றும் நகை பிரிவு பெரிதும் வளர்ச்சியடையப் போகிறது. இந்த விரிவுபடுத்தப்பட்ட பிராண்டுகளானது ஒருங்கிணைக்கப்பட்ட சந்தைக்கு வழிகாட்டுவதோடு வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் திறக்கிறது. ஒருங்கிணைக்கப்பட்ட விற்பனையாளர்கள் அதிகரிப்பால் தயாரிப்புகள்மற்றும் வடிவமைப்புகளில் தரத்தை பெற முடியும். சென்னையில் தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் நடந்துவரும் 13 வெற்றிகரமான நகை கண்காட்சிகளில், முதன்முறையாக சென்னை ஜ்வல்லர்ஸ் அசோசியேசனுடன் UBM India இணைந்து தென் இந்திய சந்தையில் சர்வதேச வர்த்தக தளத்தை ஒருங்கிணைக்கப்பட்ட விற்பனையாளர்களுடன் கொண்டு வந்துள்ளது. உள்ளூர் மற்றும் சர்வதேச முக்கிய வாங்குபவர்களுடன் நகை, வைரம், முத்து மற்றும் இரத்தினக்கற்கள் சப்ளையர்கள் இணைந்து, கலந்தாலோசித்து மற்றும் நெட்வொர்க் செய்ய இது முக்கிய தளமாக அமைந்தது. வரும்காலங்களில் இது இந்த பகுதியின் நகை தொழிலின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.'

'இதனுடன் கூட தென் இந்தியாவானது மதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்ட நகை, கைகளால் செய்யப்பட்டவை, வார்ப்பு மற்றும் மெல்லிய எடையுடைய தங்க நகை போன்றவற்றுக்கான முக்கிய தளமாக அமைந்துள்ளது. CJGFல் நீங்கள் தனிப்பட்ட மற்றும் தற்போதைய சர்வதேச மற்றும் உள்ளூர் டிரென்டுகளில் ஒவ்வொரு வகையான நகையையும் காண முடியும் Nakshi, Temple, Pacchi and Kundan Jewellery, Managa Malai, Polki Diamond Jewellery, Antique Gold மற்றும் Pearls அவற்றில் சில ஆகும்.' இவ்வாறு அவர் மேலும் கூறினார்.

ஐந்து நகரங்களின் நகை கண்காட்சிகளில் ஒன்றாக விளங்கும் CJGF(கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி) UBM India ஆல் வருடம் முழுவதும் நடத்தப்படுகிறது, UBM plc உலகின் மிகப்பெரிய நகை வர்த்தக நிகழ்ச்சியான The Hong Kong Jewellery & Gem Fair ஐ ஒருங்கிணைக்கிறது.

Mr. Yogesh Shah, President, Chennai Jewellers Association, கூறுகையில், ' கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக நகை தொழில்துறையின் ஒருங்கிணைந்த பாகமாக UBM விளங்குகிறது. இந்த போர்ட்ஃபோலியோவில் அதன் அனுபவத்தை காண்கையில், Chennai Jewellery and Gem Fair UBM India சிறந்த இடத்தில் நடத்தியது தெரிய வரும். இந்த கண்காட்சியானது வர்த்தகத்திற்கு முக்கிய முயற்சியாகவும், சிறந்த மூல தளமாகவும் மேலும் திறனை பரிமாற்றம் செய்ய மற்றும் சந்தை போக்கை தெரிந்து கொள்ள சிறந்த வாய்ப்பை வழங்கும் இடமாகவும் அமைந்தது. CJGF 2018 மூலமாக நாங்கள் UBM India உடன் இணைந்ததை பெருமையாக கருதுகிறோம் . இதன் மூலம் தெற்கு பிராந்தியத்தில் நகைதொழிலில் வளர்ந்துவரும் மையங்களுக்கு துணை செய்ய ஒரு வாய்ப்பு அமைந்தது மேலும் நாட்டின் உள் பகுதிகளில் அமைந்துள்ள இடங்களிலிருந்தும் கூட கண்காட்சியில் பங்கு கொண்டதை காணும்போது மகிழ்ச்சியாக இருந்தது.'

Mr. Uday Vummidi, Vice President, Chennai Jewellers Association இதனும் வலு சேர்க்கும் வகையில் பின்வருமாறு பேசினார், ' ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் UBM India ஆல் ஒருங்கிணைக்கப்பட்ட Chennai Jewellery and Gem Fair (CJGF) அற்புதமான நிகழ்ச்சிக்கு எங்கள் ஆதரவை அளித்ததற்கு நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவில் இந்த அளவிற்கு அளவிலும் நிலையிலும் பெரிய நிகழ்ச்சி அமைவது என்பது வரும்காலங்களில் கூட சிறிது கஷ்டமே. நாங்கள் CJGF ன் வெற்றியை எதிர்நோக்கியுள்ளோம். முதல் பதிப்பிலேயே நாங்கள் பெற்ற சிறந்த பதில்களால், கண்காட்சியானது சிறந்த வர்த்தக வாய்ப்புகளுடன் பெரிய நிகழ்ச்சியாக அமையப் போகிறது. பெருநகரங்கள் மற்றும் டையர் இரண்டு மற்றும் மூன்று நகரங்களிலும் நடத்தப்படும் தொடர்ந்த விளம்பரங்கள் மற்றும் சிறந்த சாலை கண்காட்சிகள் மூலமாக சிறந்த வாடிக்கையாளர் குழுமத்தை அடைவதையே நாங்கள் ஒருங்கிணைப்பாளராக எங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.'

 CJGF பற்றி:  

ஆண்டுக்கு இருமுறை நடக்கும் நிகழ்ச்சியான CJGF ஒவ்வொரு வருடமும் UBM ஆல் அக்டோபர் மற்றும் மார்ச் மாதம் நடத்தப்படும். முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகில் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளரான Informa PLC உடன் ஜூன் 2018ல் UBM இணைந்தது. CJGF பற்றி அதிகம் தகவல் தெரிந்துகொள்ள தயவுசெய்து வருகை தரவும்https://chennai.jewelleryfair.in/oct மேலும் ஆசியாவில் எங்களது இருப்பை தெரிந்துகொள்ளhttps://chennai.jewelleryfair.in/oct க்கு வருகை தரவும்.

UBM Asia பற்றி:  

உலகின் முன்னணி தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளரான Informa PLC உடன் சமீபத்தில் UBM Asia இணைந்தது. ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள தயவுசெய்து வருகை தரவும் http://www.ubm.com/asia

ஊடக கேள்விகளுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் :
UBM India
Roshni Mitra
roshni.mitra@ubm.com

Mili Lalwani
mili.lalwani@ubm.com
+91-22-61727000

Prachi Kumar
prachi.kumar@ubm.com
+91-7718866668


SOURCE UBM India Pvt. Ltd. 

Get content for your website

Enhance your website's or blog's content with PR Newswire's customised real-time news feeds.
Start today.

 

 
 

Contact PR Newswire

Send us an email at indiasales@prnewswire.co.in or call us at +91 22 6169 6000

 

 
 

Become a PR Newswire client

Request more information about PR Newswire products & services or call us at +91 22 6169 6000

 

 
  1. Products & Services
  2. Knowledge Centre
  3. Browse News Releases
  4. Contact PR Newswire